2021 மே 17, திங்கட்கிழமை

லிந்துலையில் 10 வீடுகள் தீயினால் நாசம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுவர்ணஸ்ரீ)
தலவாக்கலை, லிந்துலை நாகசேனைக்குட்பட்ட   திலிதுல்ரி தோட்டத்தில் இன்று அதிகாலை லயன் குடியிருப்புத் தொகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 10 வீடுகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன.

12 அறைகளைக் கொண்ட இக்குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தினால் 65 பேர் தமது உடமைகளை இழந்துள்ள நிலையில் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .