2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மாத்தளையில் 11 பாடசாலைகளில் மண்சரிவு அபாயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் நிலம் கீழிறங்கும் ஆபத்திற்குள்ளாகவுள்ள 11 பாடசாலைகள் இனம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.

மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை, புஸ்வெல்ல மகாவித்தியாலயம், கம்மடுவ பாடசாலை, பம்பரகலை பாடசாலை, வெஹிகலை பாடசாலை, வாலவலை பாடசாலை மற்றும் பமுனுவ பாடசாலை ஆகிய பாடசாலைகள் மண்சரிவு ஆபத்தை  எதிர்நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் புவியியல்த்துறைக்கு பொறுப்பான பிரதான அதிகாரி எம்.சீ.யூ.மொரேமட கூறினார்.

 மாத்தளை இந்து வித்தியாலயம், மாத்தளை அலுவிகாரை வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் நிலம் கீழிறங்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .