2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

13 வயது மாணவி காணவில்லை என புகார்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம் தாஹிர்)

மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற 13 வயது மாணவி ஒருவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன மாணவி தனமல்வில ரதம்பகஹமுவ கிராம பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயின்ற எஸ்.டி. பிரியங்கிகா (13) என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இப்பிரதேசத்தைச் சேர்ந்த இன்னுமொரு பாடசாலை மாணவன் கடத்த பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பிலும் இன்று வரை எவ்வித தகவல்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனமல்வில பொலிஸார் இது தொடர்பில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--