2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

15 நாட்களில் 1,110 டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2017 ஜூலை 23 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 1,110 பேர், டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்னர் என, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கொழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, கண்டி மாவட்டத்தில் 801 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 179 நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 130 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில், கடந்த ஏழு மாதங்களில், 103,114 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கொழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்குத் தொற்றால் நாடளாவிய ரீதியில், 298 பேர் மரணமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .