2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் 16பேர் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

குளவி கொட்டியதில் 12 மாணவர்கள் மற்றும் 5தொழிலாளர்கள் உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சென்.விஜயன்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் 4 பேரும், கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் ஏழுபேரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்கள் பாடசாலைகளுக்கும் தொழிலாளர்கள் வேலைக்கும் சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இன்றுக்காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருந்தொன்று குளவி கூட்டில் மோதியதனால்; குளவி கலைந்துகொட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .