2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கமீது வழக்கு தொடர்ந்த போலி ஆசிரியை விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி 20 வருடங்கள் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் சாலிய அபேரத்ன நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியல் உத்தரவுக்கு உட்பட்ட ஆசிரியையே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி ஆசிரியை போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி 20 வருடங்கள் ஆசிரியையாக கடமையாற்றிவுள்ளார் என்பதுடன் அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என குறித்த ஆசிரியை வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • meenavan Wednesday, 28 September 2011 04:38 PM

  20 வருட ஆசிரிய சேவையில் இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் எவ்வாறு உள்ளார்களோ? சிலவேளை அரசியலாளர் ஆகவும் இருந்தால்.......? இவ்வளவு காலமும் கல்வி அதிகாரிகள் என்ன செய்தனர்? போலி ஆசிரியை 20 வருடம் கின்னஸ் சாதனை....?

  Reply : 0       0

  Alfer Wednesday, 28 September 2011 06:37 PM

  இதுவே உண்மையான கின்னஸ் சாதனை

  Reply : 0       0

  xlntgson Wednesday, 28 September 2011 08:24 PM

  தகைமை உள்ளவர்களையும் போலிச் சான்று என்று சந்தேகிக்கின்றனர் . வெளிநாட்டுப் பட்டங்களை அங்கீகரிக்க மறுத்து மருத்துவத்துறையில் போலி மருத்துவர்கள் அதிகரித்தும் மருத்துவர் பற்றாக்குறையினால் மக்கள் அதைப் பொருட் படுத்துவதில்லை நீதிமன்ற உத்தரவில்லாவிடின். ஆனால் சில சுயாட்சி தனியார் கல்வி நிலையங்கள் கூட ஒருவரது தகைமையை அறியவோ சான்று வழங்கவோ திறனற்று ஆவணங்களையே நம்பி இருப்பதால் அதைத் தயாரித்தளிப்போர் இல்லாமல் போகார். நல்ல வேளை, பொய் சான்றுகளில் விமானம் செலுத்துவோர் செய்தி ஒன்றும் வரவில்லை. காகிதத் தகைமைகள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X