2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)   

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீரேந்துப் பகுதிகளில் பெய்த கடும் மழையினால் லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளின் மூன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை ஒன்றரை அடி அளவு திறந்து விடப்பட்டது.

இவ்வாறு வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையைத் தொடர்ந்து  கலுகல, கித்துல்கல பிரதேசத்தில் களனி கங்கைக்கு அருகில் வசித்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த அடைமழையினால் காசல்ரீ, மவுசாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

மேலும் நானுஓயா பிரதேசத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில் அதிகரித்த குளிர் நிலை காணப்படுவதால் பிரதேச மக்கள்  பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--