2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் நீர்த் தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையின் தேவைக்கேற்ப நீர் விநியோகத் திட்டமொன்றினை ஏற்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு உரிய வகையில் நீர் விநியோகமின்மையால்
இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் தமக்குரிய நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ளனர்.

மேலும் இந்த வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யும்போது இறந்தவர்களின் உறவினர்கள் வெளியிடங்களிலிருந்து நீரைக்கொண்டு வர வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X