Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
ஹட்டன்-கினிகத்தேனை பிரதான பாதையில் குயில்வத்தைத் தோட்டத்துக்கு அருகில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த இருவர் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது லொறி ஒன்று கடும் சேதத்துக்கு உள்ளாகியூள்ளது. இன்று அதிகாலை அட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற லொறி ஒன்று குயில்வத்தை தோட்டத்துக்கு அருகில் அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்த போது காட்டுப்பன்றி ஒன்று பாதையைக் கடக்க முற்பட்ட போது லொறியின் சாரதி லொறியை சடுதியாக நிறுத்த முற்பட்டதால் லொறி திடீரென பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
54 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
2 hours ago