2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தோட்ட சிறுவர்களுக்காக இலசவ வைத்திய முகாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி மஹிந்தானந்த அபிவிருத்தி மன்றம் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்ககாங்கிரஸ் என்பன ஏற்பாட்டில்  நாவலப்பிட்டி கிறேஹெட் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இலவச வைத்திய முகாமொன்று இடம்பெற்றது.  

இந்த வைத்திய முகாமில் கிரேஹெட் மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, சமர்செட், அலுகெல, பரணகல ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 183 சிறுவர்கள் பயன் பெற்றனர்.

இந்த வைத்திய முகாமில் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தோட்ட சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்ககாங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.எம்.கிருஸ்ணமூர்த்தி, தோட்ட முகாமையாளர் சமிந்த குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X