2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பௌத்த விகாரைகளின் காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான அனேக காணிகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்து வருவதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கண்டி – குருநாகல் மாவட்ட எல்லைப் பகுதியான தொடங்கஸ்லந்த பகுதிக்கு விஜயம் செய்த அவர், அப்பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்னறில் உரையாற்றும்போதே  இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பௌத்த ஸ்தலங்களும் விகாரைகளும் புனிதமானவை. முன்னர் விகாரைகளுக்கு சொந்தமான இடங்களை மக்கள் பாதுகாத்து வந்தனர். இப்போது பொதுமக்கள் அதனைத் துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல.

விகாரைகளுக்குரிய காணிகளைப் பாதுகாத்துத் தருவது பொதுமக்கள் பொறுப்பாகும் என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X