Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவ மாட்ட வைத்தியசாலை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களும் தற்காலிக சேவை வைத்தியர்களும் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிலிருந்து இன்று வரை சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை தொடர்கிறது.
ஊவா மாகாண சுகாதார அமைச்சு தியதலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ள சுற்றுநிருபம் ஒன்றில் மேலதிக கடமைபுரியும் நேரத்திற்கான கொடுப்பனவுகளை இடை நிறுத்தி உள்ளமையும், ஒரு மணித்தியாலம் மேலதிகமாக பணி புரிந்தால் அது ½ மணித்தியாலமாக கணிக்கப்பட்டு கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அண்மைக்காலமாக வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளில் அரைவாசி திரும்ப செலுத்துமாறு கூறப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் தற்காலிக சேவை வைத்தியர்கள், ஆய்வு கூட உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் பரிசோதனைகள், போன்றவற்றை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. இன்று பிற்பகல் வரை இந்த சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
9 hours ago
03 Jul 2025