Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீடம் ஏற்பாடு செய்கின்ற பொறியியற் துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் கல்வியல் கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுமென பொறியியற் பீட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்வேறு வரலாற்றுப் பின்னணிகள், இலங்கையின் கைத்தொழில், பொறியியற்துறை வளர்ச்சி, மற்றும் பொறியியல் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்புக்கள் என்பன காட்சிக்கு வைக்கப் படவுள்ளன.
பொறியியற் துறையின் அன்மைய கால வளர்ச்சி புதிய தொழில்நுற்பத்தின் வளர்ச்சி பொறியியற்துறைக்கு கணினியின் பங்களிப்பு போன்ற முக்கிய அம்சங்கள் பல இங்கு பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. பல்லாயிரக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் இதனைப் பார்வையிட சமூகமளிப்பர் என எதிர் பார்க்கப் படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .