Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக் - கண்டி)
கண்டி மடவளை நகரில் அனுமதி பெறாத கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது 33 000 வோல்ட் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துடன் இன்னும் இருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாத்ததும்பறை பிரதேச சபை மற்றும் வத்துகாமம் நகர சபை பகுதிகளில் பிரதான பாதை அருகில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள், அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் மேலதிக விஸ்தரிப்புக்கள், சன்செட்(சூரிய ஒளி மறைப்புக்கள்) போன்றவற்றை அகற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் அநேக கட்டிடங்களில் இரவோடிரவாக அவை அகற்றப்பட்டன.
நேற்று இரவு மடவளை சிரிமல்வத்தை சந்திக்கருகில் உள்ள நான்கு மாடிக்கட்டிட மொன்றின் மேல் உள்ள தற்காலிக தகரக் தாங்கியொன்றை மூவர் அகற்றிக் கொண்டிருந்தபோது அவர்களிலொருவர் அலுமினிய தகடு ஒன்றை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்மையிலிருந்த 33,000 வோல்ட் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின் கம்பிக்கருகில் அலுமினிய தகடு உயர்த்தப் பட்டதால் இவ்விபத்து ஏற்பட்டது.
திடீரென மின்சாரம் பாய்ந்ததால் ஒருவர் எரிகாயத்திற் குள்ளாகி துடிதுடித்தவாறு இருந்தார். மரணப்போராட்டத்தில் இருந்த அவரைக் காப்பாற்றச் சென்ற சக தொழிலாளிகள் இருவர் மீதும் அதி சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததனால் அவர்களும் காயத்திற்குள்ளகியுள்ளனர் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.
வத்துகாமப் பொலிஸார் மேலதிக விவாரினைகளை நடாத்துகின்றனர்.
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago