2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                         (எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை தொகுதிக்குட்பட்ட கழுகமுவ பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தமது காணிகளுக்கு  நிரந்தர காணி உறுதிப்பத்திரம் இன்மையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இக்காணிகளுக்கு வருடாந்தம் அனுமதிக் கட்டணம் செலுத்தம் சுமார் 500 குடியிருப்பாளர்கள் தமது காணிகளுக்கு நிரந்தர உறுதிப்பத்திரம் இன்மையால்  அவற்றை விற்பனை செய்வதிலும் தமது பிள்ளைகளுக்கு கைமாற்றி கொடுப்பதிலும் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--