Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கவிஞர் எலியாசனின் ஆன்றெழுந்தால் விடுதலையாம் என்ற கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஹட்டன், டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
ஹட்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஹட்டன், டிக்கோயா நகர சபைத் தலைவர் ஏ.நந்தகுமார் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தக்கவிதை தொகுதியின் முதற்பிரதியை சட்டத்தரணி ஏ.பி.கணபதிப்பிள்ளை பெற்றுக் கொள்ளவுள்ளார். செங்கொடிச்சங்கத்தின் செயலாளர் நாயகம் ஓ.ஏ.இராமையா சிறப்புரையையும் கலாபூஷணம் சாரல் நாடன் நூலறிமுக உரையையும் மேலும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணப்பிரகாசம், விரிவுரையாளர் ஏ.செல்வேந்திரன், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.நேசமணி ஆகியோர் சிறப்புரைகளையும் கவிஞர் சி.ஏ.எலியாசன் ஏற்புரையையும் கலாபூஷணம் பி.எம்.லிங்கம் நன்றியுரையையும் ஆற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago