2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஆறு இலட்சம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இருளில் ஆழ்ந்துள்ளது - இராமலிங்கம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஆறு இலட்சம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை தோட்டபுர தொழிற்சங்கவாதிகளும் நாட்டுத் தலைவர்களும் இருளில் ஆழ்த்தியுள்ளதாக முன்னாள் ஜே.வி.பி.நாடாளுமன்ற அங்கத்தவரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நேற்று மாலை கண்டியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, இந்நாட்டின் தேசிய உற்பத்தயின் நூற்றுக்கு 13.5 வீதத்தை தோட்டத் தொழிலாளர்களே சேர்க்கின்றனர். அவர்களின் வரலாரறு 180 வருடங்கள் வரை செல்கின்றது. நான்கு தலைமுறைகளாக தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க வாதிகளினாளும் அரச தலைவர்களினாளும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.

மகிந்த சிந்தனையை அரசு முதன்மைப் படுத்துகிறது. அதில் கல்விக்கு புத்துயிர் அளிக்கவென ஒரு தொகுதிக்கு ஒரு தேசிய பாடசாலை வீதம் அமைப்பதாகக் கூறுகிறது. இதன்படி சில தொகுதிகளில் பல தேசிய பாடசாலைகள் இருக்கின்றன.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டம் ஒரு தமிழ் தேசிய பாடசாலை இல்லாத ஒரு மாவட்டமாக உள்ளது. இது எமது தொழிற் சங்க வாதிகள் நான்கு தலைமுறைகளாகப் பெற்றுத்தந்த மாபெரும் சேவையாகும்; ஏகாதிபத்தியம் தலைதூக்கும் போது தொழிலாளர் உரிமைகள் பறிக்கப் படும்.

இது தான் வரலாற்று உண்மை. எனவே தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டுமானால். ஜனநாயகம் பாதுகாக்கப் படவேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் போராடவேண்டிய நேரம் நெறுங்கிக் கொண்டு வருகிறது என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--