2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நிவத்திகலை வன்முறை சம்பவம்; பிரதமர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இரத்தினபுரி மாவட்டம்,  நிவத்திகலை, குக்கூலகம தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் இந்தத் தோட்டத்தை விட்டு அச்சத்தினால் இடம்பெயர்ந்துள்ள தமிழ்க் குடும்பங்கள் தொடர்பில் பிரதமரும் பதில் பாதுகாப்பு அமைச்சருமான தி.மு.ஜயரட்ணவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

"குக்கூலகம தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து அந்தத் தோட்டத்தில் வாழுகின்ற தமிழர்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பிலும் தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளமை தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

இதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவுள்ளதாக பிரதமர் என்னிடம் உறுதியளித்துள்ளார்" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--