2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மாணவர்களின் போஷாக்கினை அதிகரிக்க வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொம் ஆஸிக்)

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதில் பெரும் தடையாக இருக்கின்ற  மந்தபோசன நிலமையை குறைத்து மாணவர் மத்தியில் போஷாக்கை உண்டு பனண்ணுவதற்காக
கண்டி மாவட்ட பாடசாலைகளில் சுகாதாரமும் போசாக்கும் என்ற வேலைத்திட்டமொன்று கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப் ட்டு நடைமுறைப் படுத்தப் பட்டுவருகிறது.

இதன் ஒரு நிகழ்வு தற்போது வத்துகாமம் வலய பாடசாலைகளுக்காக நடைபெருகிறது. பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதில் பெரும் தடையாக இருப்பது மந்தபோசனையும், குறைந்த வாழ்க்கைத் தரமும் என்று அறியப்பட்டுள்ளது.

இப்பிரச்சிகைக்கு அறியாமையே முக்கிய காரணி என்பதும் ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே பெருந்தோட்டப்பகுதிப் பாடசாலைகளை முன்னேற்று வதற்கு போசாக்கு மற்றும் சுகாதார அறிவுறுத்தல்கள் முக்கியம் என்பதை அறிந்து இதை நடைமுறைப்படுத்துகிறது.


பெருந்தோட்டப் பகுதியில் உள்ள வளங்களை முறையாகப் பயன் படுத்துவதன் மூலம் இப்பிர்ச்சினைகளைத் தீர்க் முடியும் என்பதையே இங்கு தெளிவாக எடுத்து விளக்குவதாக இச்செயலமர்விற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி திலகா குமாரிஹாமி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--