Kogilavani / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
பிபிலை, மெதகம பிரதேசத்தில், சட்ட விரோத மணல் அகழ்வு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற மொனராகலை சூழல் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த மணல் அகழ்வு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பிபிலை மெதகம கொடபோவ, ஹால்ஒய பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 ஆம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மொனராகலை தலைமை பொலிஸ் அதிகாரி ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்படுகின்றன.
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago