2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தோட்டப் பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு வாய்ப்பு:திகாம்பரம் எம்.பி.

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

அரசாங்கத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

மஸ்கெலியா மற்றும் சாமிமலை பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி குறித்து தனியான அமைச்சொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தபோதும் அந்த அமைச்சு உரிய வகையில் செயற்படாத காரணத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி மக்களால் பெற முடியாமல் போய் விட்டது எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--