Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
கிராந்துரு கோட்டை ரொடலவெல முச்சந்தி அருகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த வன விலங்குத்துறை அதிகாரிகளை பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த விலங்குத்துறை அதிகாரிகளை கிராந்துரு கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யானை தாக்கி உயிரிழந்தவர் அலுயடவெல கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான் கே.எச்.திலகரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இப்பிரதேச மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்கள்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago