2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ஆற்றில் நீராடிய இளைஞர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் ஷெரிப்தீன்)

இரத்தினபுரி வெலிகுல்ஒயா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகியுள்ளார்.

நண்பர்கள் சகிதம் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்ட போதிலும் மற்றவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

19 வயதான அசித லஹிரு என்ற மாணவனே பலியானவர் ஆவார். கடந்த 4 வருடகாலத்தில் அப்பகுதியில் சுமார் 14 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .