Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த லொறியின் உதவியாளர் லொறி பயணித்து கொண்டிருந்த வேளை, கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் இருந்து பொருட்களை ஏற்றி கொண்டு, பண்டாரவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த குறித்த லொறி, இன்று அதிகாலை தியதலாவ நீர்வடிகால் திணைக்களத்திற்கு அருகாமையில் பயணித்த போது அதன் சாரதி, லொறி கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருப்பதாக அதன் உதவியாளருக்கு தெரிவித்துள்ளார்.
அதனால் உதவியாளர் உடனடியாக கீழே இறங்க முற்பட்ட போது கால் தவறி விழுந்து லொறியில் மாட்டிக் கொண்டுள்ளார்.
தியதலாவ மாவட்ட வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் தியதலாவ பொரலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியதலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025