2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

திருடுவதற்காக வீட்டினுல் நுழைந்த நபர் வசமாக அகப்பட்டார்

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீப்தீன்)

பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் உள்ள பிரபல இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக பட்டப்பகலில் நுழைந்த நபரொருவர் வீட்டாரிடம் வசமாக அகப்பட்டதுடன், பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வீட்டின் பின் புறமாக மதிலேறி வந்த நபர் வீட்டினுல் யாரும் இல்லை என நினைத்து, கூரையை விரித்து வீட்டினுள் நுழைந்துள்ளார். அப்போது வீட்டினுள் தனிமையில் இருந்த வீட்டு உரிமையாளரைக் கண்டு தடுமாறிப் போன நபர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

அவசியமான பொருட்களை எடுத்துச் செல்லுமாறு வீட்டைச் சுற்றி பொலிஸார் இருப்பதாகவும் வீட்டு உரிமையாளர் கூறியதை நம்பிய மேற்படி நபர் கத்தியை கீழே போட்டு விட்டு சரணடைந்துள்ளார்.

உஷாரான வீட்டு உரிமையாளர் வசமாக மாட்டிக் கொண்ட அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .