2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சர்வதேச உளச்சுகாதார அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள கண்டி மாவட்ட உளவியல் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச உளச்சுகாதார அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு கண்காட்சி ஒன்று  ஆரம்பிக்கப்பட்டது.

உளவிருத்தி மற்றும் உளச் சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் விழிப்படையச் செய்யும் வகையில்  இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக  உடல் ஊணமுற்றவர்களை மட்டுமே நாம் எளிதில் கண்டு கொள்வதுடன் அவர்களது பிரச்சினைகளை மட்டுமே சமுதாயம் அடிக்கடி பேசும். ஆனால், எம் சமூகத்தில் உளவியல் ரீதியாக ஊணமுற்றவர்களும்  பரவலாக இருக்கிறார்கள் என்பதை சமூகம் கண்டு கொள்வதில்லை.

இது பற்றி பொதுமக்களை விழிப்படையச் செய்வதே இந்தக் கண்காட்சியின் நோக்கமென  கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள  கண்டி மாவட்ட உளவியல் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் கமகே தெரிவித்தார்.
 
பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்ற நிலையில்  மூன்று தினங்களுக்கு கண்காட்சி நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .