2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அக்குறணை கூட்டத்தில் அமளி துமளி

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அக்குறணை பிரதேச செயலகத்தில் சுற்றாடத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தலமையில் நடைபெற்ற போது அமளி துமளிகள் ஏற்பட்டது.

அக்குறணை நகரின் வர்த்தக சங்க உறுப்பினர்கள், கட்டிட உரிமையாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா,

அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்குவதற்கு முக்கிய காரணம் சட்டவிரோத கட்டிடங்களாகும். அதனால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது போன்று அக்குறணையிலும் அவை அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்திலிருந்த கட்டிட உரிமையாளர்கள், சட்ட விரோதமானது என தீர்மானிக்கம் பட்சத்தில் தமது கட்டிடங்களை அகற்றுவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

இருந்த போதும் சிலர் தமது கட்டிடங்களை  மட்டும் உடைப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதன் விளைவாக, பிரதி அமைச்சருக்கும் அவர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .