A.P.Mathan / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை கவிரவில தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது குழந்தை ஒன்று கிணறில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இக்குழந்தை தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கருகில் விளையாடிக்கொண்டிருந்தபோதே அந்தக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர், குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை இல்லாததால் பின்பு கிணற்றை பார்த்தபோது குழந்தை சடலமாக மிதப்பதைக்கண்டுள்ளனர். குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் கவனிமின்மையாலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்ததாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
16 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago