2020 நவம்பர் 25, புதன்கிழமை

மத்திய மாகாண சபை மாணவர்களுக்கு மடி கணினி

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அரசாங்கத்தின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் மத்திய மாகணத்தில் உள்ள சகல மாணவர்களுக்கும் ஒரு மடி கணனி வீதம் வழங்கப்படும். தற்போதைய ஜனாதிபதி முன்வைத்துள்ள புதிய கல்விக்கொள்கையில் உள்ளார்ந்த கருத்து சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒருமாணவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை கண்டி சித்திலெப்வை மகாவித்தியாலயத்தின் கணனி அறைஇ கணனித்தொகுதி என்பவற்றை திறந்து வைத்த பின் இடம் பெற்ற கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,

இன்று கல்வி கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த மாற்றங்களில் ஒன்று சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒருமாணவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். இக்கொள்கையின் பிரகாரம் தற்போது நடைமுறையில் உள்ள ஆண்களுக்கான பாடசாலை,  பெண்களுக்கான பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, தமிழ் பாடசாலை, சிங்கள பாடசாலை என்ற சகல பாகுபாடுகளும் நீக்கப்பட்டு புதிதாக மூன்று வகைப் பாடசாலைகள் மட்டுமே ஏற்படுத்தப்படும்.

அவை ஆரம்பப் பாடசாலைஇ இடைநிலைப் பாடசாலைஇ உயர் பாடசாலை என்ற மூன்று பிரிவுகளில்  மட்டுமே இயங்கப்போகின்றன.

அத்துடன் இனிவரும் காலங்களில் கணனிக் கல்வி முக்கியத்துவம் பெறவுள்ளதுடன் சகல மாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப்படும். அவற்றில் தேவையான அனைத்தையும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ஆசிரியர் பற்றக்குறை போன்ற பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .