2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலம் மத்திய மாகாண சபையில் நிறைவேற்றம்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிபாத்)

உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலம் மத்திய மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை பல்லேகலையில் உள்ள மத்திய மாகாண சபையில் மண்டபத்தில் தவிசாளர் சாலிய பண்டார தலைமையில் இடம்பெற்றது.

சபையின் அங்கிகாரத்தை பெறும் பொருட்டு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இத்திருத்தச் சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியினர் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி வாதிட்டனர்.

இதனையடுத்து சபையில் இரு தரப்பினர்களதும் கருத்துக்களும் ஆலோசனைகளும் பரிமாறப்பட்டதையடுத்து திருத்தச் சட்ட மூலம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரது ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--