2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

பரிசோதனை அறை கையளிப்பு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மாவனெல்லை ஜனாஸா நலன்புரிச் சங்கம் மற்றும் மாவனெல்லை முஸ்லிம் வர்த்தகர்கள் சங்கம் ஆகியன இணைந்து மாவனெல்லை மாவட்ட வைத்திய சாலைக்கு நோயாளர் பரிசோதனை அறை ஒன்றை நிரமாணித்து கையளித்துள்ளன.

இவ் வைத்தியசாலையில் பரிசோதனை அறை இன்மையால் நோயாளர்கள் தூர இடம் ஒன்றில் வைத்து  பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது வார்ட்டிற்கு அண்மையில் இப்பரிசோதனைக் கூடம்  அமைக்கப்பட்டுள்ளதால் நோயளர்கள் இனி தூர இடங்களுக்கு செல்லஆவண்டிய தேவை இல்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கட்டிட கையளிப்பு வைபவத்தில் வைத்திய அதிகாரிகளும் ஜனாஸா நலன்புரிச்சங்க அங்கத்தவர்களும் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--