Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
தளபாட விற்பனையில் மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேகநபரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
மர தளபாடங்களை தவணை அடிப்படையில் விற்பனை செய்யும் பாணியில் வீடுகளுக்கு சென்று, வீட்டு உரிமையாளர்களிடம் பேசி, மாலையில் அல்லது மறுநாள் காலையில் தளபாடங்களை கொண்டுவந்து தருவதாக கூறி பெருந்தொகையான பணத்தினை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையே தம்புள்ளை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபர், தம்புள்ளை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தவணை அடிப்படையில் மர தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, அதற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களை சமர்ப்பித்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Jul 2025