Kogilavani / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபத்)
மத்திய மாகாணத்தைக் சேர்ந்த 34 மிருக வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மிருக வைத்தியர்களின் சங்கப் பிரதிநிதிகள், தங்கள் சம்பளவிவகாரம் தொடர்பாக கண்டி மாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, மாவட்ட செயலாளர் இப்பிரதிநிதிகளில் ஒருவரை முறையற்ற வகையில் பேசியதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தே இவ்வைத்தியர்கள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டதைச்சேர்ந்த 10 மிருக வைத்தியர்கள், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 16 மிருகவைத்தியர்கள், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 08 மிருக வைத்தியர்கள் சேர்ந்து இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago