2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கவனயீனமே நீரிழிவு நோயின் தாக்கத்துக்கு காரணம்: வைத்தியர் நியாஸ்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நீரிழிவு நோயாளி ஒருவர் உணவுக் கட்டுப்பாடு, பொருத்தமான உடற்பயிற்சி, சந்தோஷமான மனநிலை, தேவையானபோது அளவான மருந்து, இடைக்கிடையே வைத்திய ஆலோசனை, தமது உடல் பருமனை கட்டுப்படுத்தல், ஆரம்ப நிலையில் வைத்தியம் செய்தல் ஆகிய முறைகளை பின்பற்றினால் நீரிழிவு நோயிலிருந்து சீக்கிரம் குணம் பெறமுடியும் என்று விஷேட வைத்திய நிபுணர் எஸ்.எம்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில்  இடம்பெற்ற 'நீரிழிவு நோய்களில் இருந்து தவிர்ந்து கொள்வதெப்படி' என்ற தலைப்பில் இடம்பெற்ற இலவச கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மடவளை சமூக மூலதன விருத்திக்கான அமைப்பு ஒழங்கு செய்த இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது...

நீரிழிவு நோயாளர்கள் சில விடயங்களில் பாராமுகமாக இருப்பதன் காரணமாகவே துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இடைக்கிடையே வைத்திய ஆலோசனை, தமது உடல் பருமனை கட்டுப்படுத்தல், ஆரம்ப நிலையில் வைத்தியம் செய்தல் ஆகிய முறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோயிலிருந்து குணம் பெறமுடியும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .