2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

தங்க சங்கிலி கொள்ளையடித்த நபர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

ஒரு இலட்சம் ரூபாய் பெறூமதியான மூன்று தங்க சங்கிளிகளை கொள்ளையடித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மாத்தளை பொலிஸார் ஒரு வரை நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

தன்னை விட்டு பிரிந்து சென்று தனியாக வாழ்கின்ற மனைவியை மீண்டும் தன்னுடன் மாந்திரீக முறையில் சேர்ப்பதற்காக ஒருவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுப்பதற்காகவே குறித்த சந்தேக நபர் இக்கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை, உக்குவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று இனம் காணப்பட்டுள்ளது.

அவர் பெண்களிடம் இருந்து அபகரித்து ஈடு வைத்திருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாய்கள் பெருமதியான தங்க நகைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .