2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மாணவர் பாசறை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா கிளை ஏற்பாடு செய்துள்ள இளைஞர் பாசறையொன்று இம்மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நோட்டன் பிரிஜ் விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப்பாசறையில் நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளிலிருந்து 52 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

மஸ்கெலியா புளும்பீல்ட் த.ம.வித்தியாலயம், ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரி, ஹட்டன் ஸ்ரீபாத.சி.ம.வித்தியாலயம், சமன் எலிய சிங்கள வித்தியாலயம், விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயம், கலுகல சிங்கள வித்தியாலயம், மாதேனிய சிங்கள வித்தியாலயம், நோர்வூட் த.ம.வி, கொட்டகலை த.ம.வி, கொட்டகலை கேம்பிரிஜ், அம்பகமுவ சி.ம.வித்தியாலயம், ஹட்டன் கெப்ரியல் கல்லூரி, மஸ்கெலியா சென்ஜோசப் த.ம.வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களே மேற்படி பாசளையில் பங்குபற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .