2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கண்டி கல்ஹின்னை படகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தின இருமாடிக் கட்டிடம் திறப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கல்ஹின்னை படகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்துக்கான புதிய இரு மாடி கட்டிடத்தை மத்திய மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சரத் ஏக்கநாயக்கா நேற்று மாலை திறந்து வைத்தார்.

இங்கு உரை நிகழ்த்திய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் குறைபாடுகள் இருந்தபோதும்  அதற்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த முடியாது என்றும் நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கல்வியை தொடருவதற்கு ஒழுங்குகள் செய்துள்ளதாக கூறினார்.

மத்திய மாகாண சபையி;ன் உறுப்பினர்களான ரிஸ்வி பாரூக், எதிரிவீர வீரவர்தன, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர ஹேமந்த, உபதலைவர் ஏ.எல்.எம்.றஸான்,  பாடசாலை அதிபர் ஏ.சீ.எம். ராஸீக் ஆகியோர் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--