2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

தலவாக்கலையில் நடைபாதை வியாபாரத்துக்குத் தடை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலவாக்கலை நகரிலுள்ள பாதையோரங்களில் நடைபாதை வியாபாரங்களுக்கு முற்றாக தடை விதிக்கபட்டுள்ளதாக தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரின் வாகனப்போக்குவரத்துக்களை முறையாக செயற்படுத்துவதற்காகவும் பாதசாரிகளின் நன்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டும் தலவாக்லை நகரில் நடைபாதை வியாபாரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட அங்காடி ஒன்று தெவ்ஸ்ரீபுரவிலுள்ள வி.டி.தர்மலிங்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு அருகில் எற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .