2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் பாதசாரிகள் விசனம்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அ. கனகசுந்தரம்)

தலவாக்கலை நகரில் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரிகள் சிலர் கடைகளை அமைத்துள்ளதால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நகரின் பிரதான வீதியின் இருமங்கிலுமுள்ள கடைகள் சில, முன்னோக்கி விஸ்தரிக்கப்பட்டு நடைபாதைகளை மறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பாதசாரிகளால் சீரான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாமல் உள்ளதுடன் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து தலாவாக்கலை நகரசபைத் தலைவர் உதய குமாரை தமிழ் மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

'இதுகுறித்த முறைப்பாடு எமக்கு கிடைக்கப்பெற்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் தலவாக்கலை - ஹட்டன் பிரதான பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது. தற்போது பாதசாரிகளின் பிரச்சினையை கருத்திற்கொண்டு மேற்படி வீதியை புனரமைப்பு செய்தாலும் ஜனவரி மாதம் மீண்டும் அதனை உடைத்து செப்பனிட வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அக்கடைகள் தற்போதைக்கு அவ்வாறு விடப்பட்டிருக்கின்றன' என்று தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--