2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மத்திய மாகாண பிரதேச செயலகங்களில் காணிகள் அளவை செய்து கணினிமயப்படுத்தும் திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையின் அனைத்து காணிகளையும் அளவை செய்து கணினிமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் ஏழு பிரதேச செயலகங்களில் இத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவதாக மத்திய மாகாணத்தின்  காணிகள் ஆணையாளர் திருமதி அனோமா எஸ்.பொல்வத்த தெரிவித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அரச சேவையாளர்கள் பயிற்றுவிக்கும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக்  கூறினார்.

கண்டி மாவட்டத்தில் கம்பளை, தொழுவை, உடுநுவரை, யட்டிநுவரை, கங்கவட்ட கோரளை, மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை ஆகியவற்றில் காணிகளை அளவை செய்து கணினிமயப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணத்தின்  காணிகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவிலுள்ள அரச மற்றும் தனியார்துறைக்கு சொந்தமான அனைத்து காணிகளும் அளவை செய்து அதன் உரிமையாளருடன்  கணினிமயப்படுத்தப்படும் எனவும் காணிகளில் ஏற்படுகின்ற சிக்கல்கள் இதனால் தவிர்க்கப்படும் எனவும் மாகாண காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .