Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் பணி இன்று சனிக்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக அக்குரணை நகரம் வெள்ளத்தால் மூழ்குவதக்கு பிரதான காரணமாக இனங்காணப்பட்ட சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதற்காக பல முறை முயற்சி செய்த போதும் அது இன்றே சாத்தியமாகியுள்ளது.
அக்குரணை நகரம் வெள்ளத்தாள் மூழ்குவதற்கு நகர மத்தியில் ஓடும் பிங்கா ஒயா என்று அழைக்கப்படும் ஆறு பெருக்கெடுப்பதே காரணம் எனவும் அது பெருக்கெடுப்பதற்கு சட்ட விரோத கட்டிடங்களே காரணம் என்றும் இனம் கானப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இன்று காலை அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்களை உடைக்கும் போது மக்களின் எதிர்ப்புகளும் ஏற்பட்டதுடன் சிலர் தாமாகவே உடைத்து கொடுப்பதற்கு முன்வநதுள்ளனர்.
நகர அபிவிருத்தி சபை, வீதி அபிவிருத்தி சபை, அக்குறனை பிரதேச சபை, பிரதேச செயலகம் பொலிஸ் திணைக்களம் உட்பட பல அரச நிறுவனங்கள் கட்டிடங்களை உடைக்கும் பணிக்கு ஒத்துளைப்பு வழங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025