Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.ராவின்)
இன்றைய அரசாங்கம் மாகாணசபைகளின் அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு உடந்தையாக சப்ரகமுவ மாகாணசபையும் செயற்படுவது வேதனை அளிக்கின்றது என சப்ரகமுவ மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினர் யெயியா எம். இப்னார் கூறினார்.
சப்ரகமுவ மாகாணத்தில் 20 இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்கள் நலன்கருதி அண்மையில் சப்ரகமுவ மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. பெரும்பான்மையின மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. தோட்ட மற்றும் முஸ்லிம் கிராமமக்களது வீதிகள் பல வருடங்களாக பழுதடைந்து கவணிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றன. இவை அபிவிருத்தி செய்ய இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் பல வைத்தியர்கள் இல்லாத நிலையில் மூடுவிழா கண்டு வருகின்றன. பல தோட்ட பாடசாலைகள் வளங்கள் , ஆசிரியர்கள் பற்றாகுறை காரணமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இதற்கு எவ்வித தீர்வும் முன்வைக்காமல், பெரும்பான்மையின மக்களின் நலன்கருதிய இம்முறை (2010) வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளதாக அவ்வப்போது கூறிய போதிலும் சப்ரகமுவ மாகாணசபை அதற்கு முரணாக செயற்படுவது வேதனை அளிக்கின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago