Suganthini Ratnam / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
கண்டி, போகம்பரை சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக துன்புறுத்தல்கள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் போகம்பரை சிறைச்சாலை பொறுப்பதிகாரியிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மிரர் இணையத்தளத்திடம் இன்று மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் மேலும் கூறுகையில்,
கண்டி, போகம்பரை சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளுக்கு எதிராக பல்வேறு துன்புறுத்தல்கள் இடம்பெற்றுவருகின்றன. தமிழ் அரசியல்க் கைதிகள், ஏனைய சக கைதிகளால்; நாளாந்தம் துன்புறுத்தப்பட்டு வருவது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தனக்கு தெரிவித்தாக முரளி ரகுநாதன் கூறினார்.
இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் போகம்பரை சிறைச்சாலை பொறுப்பதிகாரி குலத்சிங்க, அனைத்து சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா ஆகியோரிடம் இன்று காலை தான் முறைப்பாடு செய்ததாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், உடனடியாக குழுவொன்றை நியமித்து தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக போகம்பரை சிறைச்சாலை பொறுப்பதிகாரி குலத்துங்க மற்றும் கொழும்பு அனைத்து சிறைச்சாலைப் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா உறுதியளித்ததாக முரளி ரகுநாதன் கூறினார்.
இதேவேளை, மேற்படி தமிழ் அரசியல்க் கைதிகள் எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகவில்லையெனவும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் துரித விசாணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் போகம்பரை சிறைச்சாலை பொறுப்பதிகாரி குலத்துங்க தெரிவித்தார்.
14 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago