2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கைவிடப்பட்ட பெண் சிசு பொலிஸாரால் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

பண்டாரவளை, பூனாகல முதலாம் பிரிவு தொழிற்சாலைக்கு அருகில் பிறந்து ஒருநாளான  குழந்தை ஒன்றை பண்டாரவளை பொலிஸார் இன்று திங்கட்கிழமை அதிகாலை  5.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

அப்பிரதேசத்தினுடாக சென்ற தோட்டத்தொழிலாளர்கள் துணியொன்றின் மூலம் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பிரதேசத்தில் இருந்து குழந்தையை மீட்டு தியதலாவ வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குழந்தை பிறந்து ஒரு நாளாக இருக்கலாம் எனவும் தற்போது குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தியதலாவ வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .