2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸ் வைத்தியசாலையில் துப்பாக்கி திருட்டு : இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது

Kogilavani   / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிக்பாத்)

கண்டி குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையின் பொலிஸ் காவலறையில் வைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் அங்கு கடமையிலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையின் காவல் நிலையத்தில் வழமைப்போல் இரு பொலிஸ் கான்ஸ்டபின்கள் கடமையிலீடுப்பட்ருந்தனர். இதன்போது அவர்களில் ஒருவரது துப்பாக்கி திடீரென காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .