2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மேல் கொத்மலை நீர்மின்திட்ட சுரங்க பாதை ஜனாதிபதியினால் இன்று திறப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 04 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையின் மிக நீளமான சுரங்கப் பாதையான மேல் கொத்மலை சுரங்கப் பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

12.9 கிலோமீற்றர் நீளடைய இச்சுரங்கப்பாதை இலங்கையின் மிக நீளமான சுரங்க பாதையாகும். 150 மெகா வொட் மின்சாரத்தை தேசிய மின்சக்தியுடன் சேர்க்கும் இத்திட்டம் ஜப்பானிய உதவியுடன் ஐந்து கட்டங்களாக நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

மேல் கொத்மலை திட்டத்தின் ஐந்து கட்டங்களில் முதலாம் கட்டம் 74 சத வீதமும், இரண்டாம் கட்டம் 76 சத வீதமும், மூன்றாவது கட்டத்தின் 79 வீதமும்,  நான்காவது கட்டத்தில் 57 சத வீதமும்,   ஐந்தாவது கட்டத்தில் 54 சத வீதமுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டள்ளன.

இத்திட்டத்தை நிர்மானிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் 33,265 மில்லியன் யெண்களை வழங்கியுள்ளதுடன் இலங்கை மின்சாரச்சபையினால் 87,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முப்பது வருட யுத்தத்தின் பின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை வழங்குவதற்கு மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை வழங்குவதே இத்திட்டத்துக்கான அரசாங்கத்தின் நோக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .