2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

இலங்கை செஞ்சிலுவைச் சங்க நுவரெலியா கிளையின் ஏற்பாட்டில் எல்ஜின், லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த 337 குடும்பங்களுக்கு நீன்ட நாட்களாக நிலவிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தீபாவளி தினமான நேற்று இக்குடிநீர் திட்டத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சுகாதார பிரிவிற்கான அத்தியட்சகர் டாக்டர் லசந்த கொடிதுவக்குவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க நுவரெலியா கிளையின் நிறைவேற்று அதிகாரி சமன் சந்திரசிறி, சுகாதார இனைப்பாளர் தேவதாஸ், சுகாதார உத்தியோகஸ்தர் பிரவீன் மார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--