2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Kogilavani   / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 225 தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட நிருவாகத்தின் கெடுபிடிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் தேயிலைத்தோட்டத்தினை உரியவகையில் பாராமரிப்பதற்கு தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 3 ஆம் திகதியும்,  அதன் பின்பு கடந்த 7 ஆம் திகதியிலிருந்தும் இந்த வேலை  நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள்  தத்தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இப் போராட்டம் தொடர்பில் மெல்மோரல் தோட்ட முகாமைத்துவத்துக்கும் தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படவில்லை.

இப் போராட்டம் தொடர்பாக பெல்மோரல் தோட்ட நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது எவ்வித பதிலையும் வழங்குவதற்கு ஒருவரும் முன்வரவில்லை.

இந் நிலையில் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--