2020 நவம்பர் 25, புதன்கிழமை

குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் ரி௫6 ரக துப்பாக்கி, குறித்த வைத்தியசாலைக்கு அருகிலுள்ள சிறிய நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து நேற்று புதன்கிழமை மாலை பலகொல்ல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலகொல்ல பொலிஸாருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து குறித்த நீர்த்தேக்கத்தை சோதனையிட்ட பொலிஸார் இந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையின் காவலறையொன்றிலிருந்து இந்த துப்பாக்கி கடந்த 30ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்தததுடன் சந்தேகத்தின் பேரில் அன்றிரவு கடமையிலிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காணாமல் போனதாகக் கூறப்படும் துப்பாக்கியை மீட்டுள்ள பலகொல்ல பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .