2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தெல்கஸ்தென்ன பாணகமுவ பிரதேசத்தில் புதிய பாதை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட தெல்கஸ்தென்ன பாணகமுவ பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் இல்லாதிருந்த பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்குறணை பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான பாணகமுவ பிரதேசத்தை சேர்ந்த மக்கள் சிரமத்திற்கு மத்தியிலேயே தமது போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர்.

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தினை ஒதுக்கி இத்திட்டத்தினை செயற்படுத்துவதன் மூலம், இப்பிரதேச மக்கள் சீரான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியுமென இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த அக்குறணை பிரதேசசபை உறுப்பினர் எம்.அய்.எம்.இக்ராம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--